விக்ரம் படத்தால் தமிழகத்திம் மட்டும் இத்தனை கோடி லாபமா! எந்த ஒரு திரைப்படம் செய்திராத சாதனை..
கோடிக்கணக்கில் லாபம்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்த விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
அதன்படி விக்ரம் திரைப்படம் தற்போது வரை உலகமெங்கும் ரூ. 320 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது. கடைசியாக வெளியான எந்த ஒரு முன்னணி நடிகரின் தமிழ் திரைப்படமும் இப்படியொரு சாதனை படைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் 100 கோடி வசூலை தாண்டியுள்ள விக்ரம் திரைப்படம் தற்போது பாகுபலி திரைப்படத்திற்கு அடுத்த படியாக திகழ்ந்து வருகிறது. மிக விரைவில் பாகுபலி படத்தை முந்தி தமிழ்நாட்டில் NO.1 திரைப்படமாக விக்ரம் இருக்கும் என நம்பப்படுகிறது.
இதற்கிடையே தமிழகத்தில் அப்படம் படைத்துள்ள மேல் ஒரு சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம், விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 40+ கோடிளவில் லாபத்தை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது வேறு எந்த ஒரு தமிழ் திரைப்படமும் படைத்திராத வசூல் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

கையில் குழந்தையுடன் தொகுப்பாளினி பிரியங்கா ! அவர் வீட்டில் நடந்த விஷேசம்..