பல நாள் கழித்து சிக்கிய லோகேஷ் கனகராஜ்.. விக்ரம் படத்தை காப்பி அடித்து தான் எடுத்ததற்கான சாட்சி
லோகேஷ் கனகராஜ்
தென்னிந்திய சினிமாவில் தற்போதுள்ள சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் இவர் அடுத்ததாக ரஜினியை வைக்க இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
லியோ படத்திற்கு முன் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் விக்ரம். உலகநாயகன் கமல் ஹாசனுக்கு பல வருடங்களுக்கு பின் மாபெரும் வெற்றியை விக்ரம் தான் தேடி கொடுத்தது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் LCU எனும் கான்சப்ட்டை கொண்டு வந்து அனைவரையும் அசரவைத்தார். அதுமட்டுமின்றி கேமியோ ரோலில் கடைசி சில நிமிடங்கள் மட்டுமே திரையில் தோன்றி திரையரங்கையே அதிர வைத்தார் சூர்யா.

இப்படி பல கூஸ்பெம்ப்ஸ் ஏற்படும் விஷயங்கள் கூட மிரட்டிய லோகேஷ் விக்ரம் படத்தை பிரபல வெப் தொடர் ஒன்றில் இருந்து காப்பியடித்து தான் எடுத்துள்ளார் என ஆதாரத்துடன் நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
விக்ரம் காப்பியா
விக்ரம் படத்தில் எப்படி தனது மகன் நேர்மையாக இருந்ததற்காக வில்லன்களால் கொல்லப்பட்டு, அதற்காக தந்தை கமல் பழிவாங்கி, தனது பேரனையும் காப்பாற்றுவாரோ. அதே போல் தான் கடந்த 2015ஆம் ஆண்டு Better Call Saul எனும் ஆங்கில வெப் தொடரிலும் கதைக்களம் அமைத்திருக்கும்.
இதை கவனித்த நெட்டிசன்கள் சிலர். விக்ரம் திரைப்படத்தை Better Call Saul வெப் தொடரில் இருந்து தான் லோகேஷ் காப்பியடித்து எடுத்துள்ளார் என கூறி வருகிறார்கள்.
என்ன அப்படியே உருவிருக்கான். சுட்லீய விட கஞ்சா யாவாரி பெரிய திருடன் போலயே pic.twitter.com/iiub29xcJo
— L E E (@Leennister) July 12, 2023
நாளை திரையரங்கில் வெளியாகும் மாவீரன் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri