ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ்.. அட இந்த தேதியா?
துருவ நட்சத்திரம்
கிட்டதட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தை வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், இப்படத்தின் மீது இருக்கும் பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
கவுதம் மேனன் இயக்கிய இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
கடந்த 2023ஆம் ஆண்டு இப்படம் வெளிவரும் என கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு ரிலீஸுக்கு தயாரான நிலையில், கடைசி நேரத்தில் ரிலீசாகாமல் போய்விட்டது.
அதன் பின், இப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது.
அட இந்த தேதியா?
அதன்படி, இப்படம் மே 1 - ம் தேதி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாலை பேருந்துக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே என்ன நடந்தது? IBC Tamilnadu
