தமிழகத்தில் மட்டுமே விக்ரம் படம் செய்த மொத்த வசூல்- அடிதூள் கிளப்பும் கலெக்ஷன்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் முதன்முறையாக வெளியான திரைப்படம் விக்ரம். படம் நல்ல கதைக்களத்தை கொண்டு வெளியாக மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது.
கடந்த ஜுன் 3ம் தேதி வெளியான இத்திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. வெளியான சில தினங்களிலேயே படம் ரூ. 100 கோடி வரை உலகம் முழுவதும் வசூலிக்க படக்குழு செம கொண்டாட்டத்தில் இறங்கினர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் படத்திற்காக பணிபுரிந்த இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் கார் பரிசளித்தார்கள்.

படத்தின் தமிழக வசூல்
படம் ரிலீஸ் ஆகி 8 நாட்கள் ஆகிவிட்டது, இப்படம் தமிழகத்திலேயே பெரிய வசூல் சாதனை செய்தது. அதாவது 8 நாட்களில் ரூ. 109 கோடி வரை தமிழகத்தில் வசூல் சாதனை செய்திருக்கிறது.
திருப்பதியில் காலணி அணிந்து வந்த விவகாரம்- விக்னேஷ் சிவன், நயன்தாரா செய்த வேலை