ஆந்திர மாநிலத்தில் கமல்ஹாசனின் விக்ரம் படம் கொடுத்த ஷேர் மட்டும் இத்தனை கோடியா?- ப்ளாக் பஸ்டர் தான்
நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் முதன்முறையாக நடித்துள்ள இப்படம் மக்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.
ஒரு முக்கிய காரணம் கமல்ஹாசன் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு படம் வருகிறது.
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் ரூ. 120 முதல் ரூ. 150 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதுவரை மொத்தமாக படம் ரூ. 442 கோடி மேல் வசூலித்துள்ளது.
இப்போதும் சில இடங்களிலும் படம் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது.
ஆந்திராவில் படத்தின் ஷேர்
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியான இப்படம் எல்லா மொழிகளிலும் செம ஹிட் தான். ஆந்திர மாநிலத்தில் மட்டும் 50 நாள் முடிவில் படம் ரூ. 18 கோடி வரை ஷேர் கொடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
காமெடி நடிகர் யோகி பாபுவின் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அழகான வீடு