அந்நியன் முதல் பிதாமகன் வரை.. விக்ரம் நடிப்பில் மிரட்டிய சிறந்த படங்கள்
தமிழ் சினிமாவில் சில ஹீரோக்கள் மாஸான படங்கள் மூலமாக பாப்புலர் ஆகி இருக்கலாம்.. ஆனால் நடிகர் விக்ரம் அவரது நடிப்பு திறமைக்காக தான் நடிக்கும் எல்லா படங்களையும் வியந்து பார்க்க வைப்பவர். அவரது கெரியரில் அப்படி பல படங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
அந்நியன்
ஷங்கர் இயக்கிய அந்நியன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய ஹிட் ஆன படம். இதில் விக்ரம் மல்டி பர்சனாலிட்டி பிரச்சனை உடைய நபராக நடித்து இருப்பார். சாதாரண நேரத்தில் அம்பி, சமுதாயத்தில் தவறை கண்டால் அந்நியன், காதல் செய்ய ரெமோ என மூன்று விதமான நபர்கள் ஒருவருக்குள்ளேயே இருப்பது தான் கதை.
இந்த படத்தில் விக்ரமின் நடிப்பு தான் ஹலைட். அம்பி மற்றும் அந்நியன் என மாறி மாறி பிரகாஷ்ராஜ் முன்னிலையில் விக்ரம் பேசும் ஒரு காட்சியை பார்த்தால் goosebumps நிச்சயம்.

பிதாமகன்
பாலா இயக்கிய இந்த படத்தில் விக்ரம் மற்றும் சூர்யா இருவரும் சேர்ந்து நடித்து இருந்தனர். அதில் விக்ரம் பிணம் எரிக்கும் வேலை செய்யும் நபராக நடித்து இருப்பார்.அழுக்கு உடை, கறை பிடித்த பற்கள், பரட்டை தலை என அந்த கதாபாத்திரத்தில் விக்ரம் நடிப்பு எல்லோரையும் வியக்க வியக்கும்.

சேது
விக்ரமுக்கு ஹீரோவாக முதல் படம் இது. பாலா இயக்கத்தில் 1999ல் ரிலீஸ் ஆனது சேது. ஆரம்பத்தில் இந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் படத்தை பார்த்தவர்கள் அதை மற்றவர்களிடம் சொன்னதால் ஒரு வாரத்திற்கு பிறகு வசூல் சூடு பிடிக்க தொடங்கியது.
விக்ரம் மற்றும் பாலா என இரண்டு நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்தது இந்த படம் தான். தனக்கென ஒரு அடையாளத்தை தேடி கொண்டிருந்த விக்ரம் ஹீரோவாக ஜெயித்துவிட்டார், பாலு மகேந்திரா அசிஸ்டென்ட் என்ற அடையாளத்தோடு வந்த பாலாவுக்கு தன்னை இயக்குனராக சேது மூலம் நிரூபித்துவிட்டார்.

தெய்வத்திருமகள்
மூளை வளர்ச்சி குறைபாடுடைய நபர், அவருக்கு பிறக்கும் குழந்தையை எப்படி வளர்க்கிறார், ஒரு கட்டத்தில் அவரது மனைவி குடும்பத்தினர் குழந்தையை தூக்கி சென்றுவிட அவர் எப்படி குழந்தையை மீட்கிறார் என்பது தான் படம்.
அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு தான் தற்போதும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது. விக்ரம் மகளாக நடித்து இருந்த சாராவும் கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

ஐ
ஷங்கர் இயக்கத்தில் உருவான ஐ படத்தில் பாடி பில்டர் மற்றும் அதனை தொடர்ந்து ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட நபராக நடிப்பில் மிரட்டி இருப்பார்.
அதிலும் நோய்வாய்ப்பட்ட நபராக நடிக்க விக்ரம் தனது உடல் எடையை மிக அதிக அளவு குறைத்து இருந்தது அந்த நேரத்தில் அனைவருக்கும் அதிகம் அதிர்ச்சி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

தளபதி 66 பூஜை வீடியோ வெளியானது! ராஷ்மிகாவின் அந்த ரியாக்ஷனை பாருங்க
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan