விக்ரம் படத்திற்கு முதன்முதலில் வைக்கப்பட்ட டைட்டில் ! கமல்ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்..
உலக நாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம். தீவிர கமலின் ரசிகரான லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக அவருடன் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் விக்ரம்.
மேலும் லோகேஷ் சொன்னது போல விக்ரம் படத்தை 100% திரைப்படமாக உருவாகியுள்ளார். இந்நிலையில் படத்தை நேற்று ரசிகர்களுடன் திரையரங்கில் கண்ட கமல் விக்ரம் படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 1986 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படத்திற்கு ஹிட் லிஸ்ட் என்று தான் தலைப்பு வைக்கப்பட்டதாம். மேலும் போதை மருந்து கடத்தல் பற்றின கதையாகவும் கமல் அப்போது விக்ரம் படத்திற்கு அமைத்திருந்தாராம்.
ஆனால் அப்போதைய கால கட்டத்திற்கு அந்த கதை சரியாக இருக்காது என்பதால், அதனை தவிர்த்து விட்டாராம். அந்த கதையை தான் தற்போது லோகேஷ் கனகராஜ் தற்போதையா விக்ரம் படத்திற்கு ஏற்றார் போல் மாற்றியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கும், அருண் விஜய்க்கும் இடையே சண்டையா? உண்மையை உடைத்த நடிகர்

பாகிஸ்தானை குறிப்பதால் 'மைசூர் பாக்' பெயர் மாற்றம்: இனி இப்படித்தான் அழைக்க வேண்டுமாம் News Lankasri

மில்லில் வேலை பார்த்த தமிழ்நாட்டுக்காரர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது ஐஏஎஸ் அதிகாரி News Lankasri
