விக்ரம் - பா.ரஞ்சித் பட ஓடிடி உரிமையை மிக பிரம்மாண்ட தொகைக்கு வாங்கிய நிறுவனம்! இத்தனை கோடியா?
விக்ரம் - பா.ரஞ்சித் படம்
நடிகர் விக்ரம் அடுத்து பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் பூஜை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் ஷூட்டிங் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
சீயான் 61 என தாற்காலிகமாக பெயரிடப்பட்டு இருக்கும் அந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த பீரியட் படத்தினை 3டியில் படமாக்க இருக்கின்றனர் என்றும் முன்பே தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.

ஓடிடி உரிமை இத்தனை கோடியா?
தற்போது இந்த படத்தின் ஓடிடி உரிமை மட்டும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி இருக்கிறது. 50+ கோடிக்கு நெட்பிலிக்ஸ் நிறுவனம் தான் இதை வாங்கி இருக்கிறது என தகவல் வெளியாகி இருக்கிறிது. சீயான் படம் மட்டுமின்றி ஸ்டூடியோ கிரீனின் வேறு சில படங்களையும் சேர்த்து தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறதாம்.
ஷூட்டிங்கே இன்னும் தொடங்காத நிலையில் தற்போதே வியாபாரத்தை இந்த படம் தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா - சமந்தாவின் மேக் அப் உதவியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம்! அசர வைக்கும் தகவல்