கோலிவுட் திரைப்படங்களில் விக்ரம் தான் NO.1 ! முக்கிய இடத்தில் வசூல் சாதனை..
விக்ரம் தான் NO.1
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வரும் திரைப்படம் விக்ரம்.
நாளுக்கு நாள் படத்தின் வசூல் அதிகமாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது வரை அப்படம் உலகளவில் ரூ. 320 கோடிக்கும் வசூலை வாரி குவித்துள்ளது.
மேலும் தமிழகத்தில் மட்டும் ரூ.130 கோடிக்கும் வசூலை குவித்துள்ள விக்ரம் இனி வரும் நாட்களில் பாகுபலி படத்தை முந்தி தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் விக்ரம் திரைப்படம் 12 நாட்களில் UK-வில் £757,285 வசூல் செய்துள்ளது. இந்திய மதிப்பின் படி ரூ. 7.1 கோடி வசூல் செய்து கோலிவுட் திரையுலகின் NO.1 திரைப்படமாக மாறியுள்ளது.

அன்பே சிவம் திரைப்படத்தில் ஏஜென்ட் டினா ! இணையத்தில் படுவைரலான புகைப்படம்..