பாக்ஸ் ஆபிஸை தொடர்ந்து, OTT-யிலும் விக்ரம் சாதனை ! எந்த படத்திற்கும் கிடைகாத வரவேற்பு..
OTT-யிலும் விக்ரம் சாதனை
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம், பெரிய எதிர்பார்பிற்கு இடையே வெளியான இப்படம் லரலாறு காணாத வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.
கமலுடன் சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் என பல உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக நடித்த இப்படத்தை கொண்டாடி தீர்த்து விட்டார்கள் ரசிகர்கள், அதன்படி இப்படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பாகுபலி திரைப்படம் செய்த வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி டாப் இடத்திற்கு வந்துள்ளது விக்ரம்.
இதற்கிடையே இப்படம் சமீபத்தில் தான் பிரபல OTT தளமான ஹாட்ஸ்டாரில் வெளியானது, அங்கும் விக்ரம் திரைப்படம் புதிதாக சாதனையை நிகழ்த்தி இருக்கிறது.
ஆம், அதன்படி இப்படம் வெளியான முதல் வாரத்திலே அதிக Viewership, Subscription மற்றும் Watch Time-யை ஹாட்ஸ்டாரில் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.

மணி ரத்னத்தின் மீது அதிருப்தியில் இருக்கிறாரா விக்ரம்.. காரணம் என்ன