விக்ரம் பட சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா? அதிர வைக்கும் பிஸ்னஸ்
கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் படம் விக்ரம். வரும் ஜூன் 3ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இசை வெளியீட்டு விழா
வரும் மே 15ம் தேதி விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. ட்ரைலர் ரிலீஸ் ஆனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைப்பற்றிய ஸ்டார் நெட்ஒர்க்
இந்நிலையில் விக்ரம் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை ஸ்டார் நெட்ஒர்க் கைப்பற்றி இருக்கிறது. மொத்தம் ஐந்து மொழிகளில் உரிமையை மொத்தம் 125 கோடி ருபாய் கொடுத்து கைப்பற்றி இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.
ரிலீசுக்கு முன்பே இவ்வளவு பெரிய பிரம்மாண்ட வியாபாரம் நடந்து இருப்பது சினிமா துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Super proud & happy to announce! ? In cinemas worldwide on June 3rd #KamalHaasan #VikramFromJune3 https://t.co/DrdKgGaQd7 pic.twitter.com/zRuS42kpJ9
— Vijay Television (@vijaytelevision) May 4, 2022