வட இந்தியர்களிடம் தமிழ் பாரம்பரியத்தை அழகாக கூறிய நடிகர் விக்ரம்- வைரலாகும் வீடியோ

By Yathrika Sep 25, 2022 08:30 AM GMT
Report

பொன்னியின் செல்வன்

இந்தியா முழுவதும் இந்த பிரம்மாண்ட படத்தை பற்றிய பேச்சு தான் அதிகமாக உள்ளது. காரணம் கல்கி எழுதிய இந்த செம ஹிட் நாவலை தழுவி தான் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ரூ. 500 கோடி பட்ஜெயட்டில் தயாரான இப்படத்தில் ஏராளமான நடிகர்கள் நடிக்க வரும் செப்டம்பர் 30ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

அண்மையில் படக்குழு மும்பை சென்று அங்கு படத்தை புரொமோட் செய்துள்ளார்கள்.

வட இந்தியர்களிடம் தமிழ் பாரம்பரியத்தை அழகாக கூறிய நடிகர் விக்ரம்- வைரலாகும் வீடியோ | Vikram Speech About Tanjore Temple In Mumbai Viral

விக்ரமின் பேச்சு

அங்கு பத்திரிக்கையாளர் ஒருவர், வரலாற்றை தெரிந்துகொள்வது எந்த அளவு முக்கியமானது என கேட்டார். அதற்கு விக்ரம், நாம் எகிப்தில் உள்ள பிரமீடுகள் பற்றி பேசுகிறோம். அதை எப்படி கட்டி இருப்பார்கள் என்றெல்லாம் யோசிக்கிறோம்.

ஆனால் நம் இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. அதில் உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் என்றால் அது தஞ்சை பெரிய கோவில் தான். சோழ மன்னர் ராஜராஜ சோழன் அந்த கோவிலைக் கட்டினார். உலகத்திலேயே உயரமான கோபுரத்தை கொண்ட கோவில் அதுதான்.

அந்த கோவில் கோபுரத்தின் உச்சியில் உள்ள கல் மட்டும் 80 டன் எடை கொண்டது. பைசா நகரத்தின் சாய்ந்த கோபுரத்தைப் பார்த்து நாம் வியப்படைகிறோம், பாராட்டுகிறோம். ஆனால் தஞ்சை பெரிய கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக 6 பூகம்பங்களை தாங்கி இன்று வரை நிற்கிறது.

அதிலும் எந்த வகையான பிளாஸ்டர்களும் இல்லாமல் அந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. அது எப்படி சாத்தியமானது என்றால், முதலில் சுற்றுச்சுவர், பின்னர் 6 அடி நீளத்துக்கு தாழ்வாரம் அமைத்து அதன்பின்னர் மையப்பகுதியில் கோவிலை கட்டி உள்ளனர். அதனால் தான் அது இத்தனை பூகம்பங்களையும் தாண்டி இன்றளவும் நிலைத்து நிற்கிறது. 

எந்திரங்கள் எதுவும் இல்லாமல், யானைகள், குதிரைகள் மற்றும் மனிதர்களைக் கொண்டு அவ்வளவு பெரிய கட்டுமானத்தைக் கட்டியுள்ளனர். மேலும் ராஜராஜசோழன் தனது காலத்தில் 5 ஆயிரம் அணைகளை கட்டியுள்ளார். நீர் மேலாண்மைக்கு தனி துறையை அமைத்துள்ளார்.

அந்த காலத்திலேயே தேர்தல்கள் நடத்தியுள்ளனர். ஆறுகளுக்கு பெண்களின் பெயர்களை சூட்டியுள்ளனர். இலவச மருத்துவமனைகள் கட்டியுள்ளனர். கடன் உதவிகளையும் வழங்கி கண்ணியமாக வாழ்ந்துள்ளனர். இவையெல்லாம் 9-ம் நூற்றாண்டில் நடந்தவை என்றால் ஆச்சரியமாக உள்ளது.

இதெல்லாம் நடந்து சுமார் 500 ஆண்டுகளுக்குப் பிறகு தான் கொலம்பஸ் அமெரிக்காவையே கண்டுபிடித்தார். இதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். வட இந்தியா, தென் இந்தியா என பிரித்து பார்க்க வேண்டாம். நாமெல்லாம் இந்தியர்கள் என்று அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

நடிகர் சியான் விக்ரமின் தந்தை யார் தெரியுமா, அவரும் ஒரு நடிகரா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US