மலையாள முன்னணி நடிகரின் படத்தையே முந்திய விக்ரம் ! வரலாறு காணாத வெற்றி..
விக்ரம்
கோலிவுட் திரையுலகமே எதிர்பார்த்திருந்த காத்திருந்த திரைப்படம் விக்ரம்.
உலகநாயகன் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முக்கிய நடிகர்களை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விக்ரம் வெளியாகி 15 நாட்களை கடந்து கூட திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக்கொண்டு இருக்கிறது. மேலும் தற்போது வரையில் இப்படம் உலகளவில் ரூ.345 கோடியை வசூலித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
வரலாறு காணாத வெற்றி
அதுமட்டுமின்றி நேற்று நடந்த இப்படத்தின் வெற்றி விழாவில் விக்ரம் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.75 கோடி ஷேர் எடுத்துள்ளதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில் கேரளாவில் விக்ரம் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை கண்டுள்ளது. அதன்படி இப்படம் அங்கு சுப்பர் ஹிட்டான குரூப் திரைப்படத்தின் வசூலை கடந்துள்ளதாம்.
இதன்முலம் கே.ஜி.எப் 2, Bheeshma Parvam, உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு கேரளாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாக விக்ரம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது.

பல இடங்களில் ஆல்டைம் ரெக்கார்ட் செய்த விக்ரம் படத்தின் இதுவரையிலான முழு வசூல் எவ்வளவு தெரியுமா?