லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் விக்ரம்.. செம மாஸ் கூட்டணி
நடிகர் விக்ரம்
விக்ரம் நடிப்பில் தற்போது தங்களான் திரைப்படம் உருவாகி வருகிறது. பா. ரஞ்சித் இயக்கும் இப்படத்திற்காக விக்ரம் கடினமாக உழைத்துள்ளார்.

இதனால் இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல வருடங்களாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்டிருந்த துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகிறது.
லோகேஷ் - விக்ரம்
இந்த நிலையில், விக்ரம் அடுத்ததாக செம மாஸ் கூட்டணி ஒன்றை அமைத்துள்ளார். தற்போதைய தமிழ் சினிமாவின் சென்சேஷன் இயக்குனராக இருக்கும் லோகேஷ் கனகராஜின் துணை இயக்குனர் மகேஷ் பாலசுப்பிரமணியம் என்பவருடன் கைகோர்க்க உள்ளாராம் விக்ரம்.

இப்படத்தை லலித் குமார் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. லலித் தற்போது லியோ படத்தை தயாரித்து வருகிறார். ஏற்கனவே விக்ரம் நடித்த கோப்ரா படத்தையும் அவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டமாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் புதிய வீடு- முழுவதும் முடிந்து அவரே வெளியிட்ட வீடியோ