17 வருட வலி, சினிமாவே வேண்டாம் என நினைத்தேன்.. நடிகர் விக்ராந்த் உருக்கம்
லால் சலாம்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9 ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய விக்ராந்த், எனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு ரொம்ப நன்றி.
விக்ராந்த் உருக்கம்
நான் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 17 வருடன் ஆகிவிட்டது. இன்னும் எதுவுமே சரியாக அமையவில்லை. எல்லாம் நல்லா செய்தும் எதோ மிஸ்ஸாகிக் கொண்டே இருந்தது. இந்த ஒரு விஷயத்தால் சினிமாவை விட்டு விலகலாம் என்று நினைந்தேன்.
அந்த சமயத்தில் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மேடமிடம் இருந்து அழைப்பு வந்தது. படத்தில் சின்ன ரோல் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கொடுத்ததற்கு நன்றி. நான் சினிமாவில் தொடர வேண்டும் என இறைவன் நினைக்கிறார் என்று விக்ராந்த் கூறியுள்ளார்.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
