பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கராத்தே ராஜா மனைவி யார் தெரியுமா?- குடும்ப போட்டோ
கராத்தே ராஜா
தமிழ் சினிமாவில் எப்படி கதாநாயகன் கதாபாத்திரம் வெயிட்டாக பார்க்கப்படுகிறதோ அதேபோல் சில படங்களில் வில்லன் இல்லையேல் படமே இல்லை என சில உள்ளது.
அந்த அளவிற்கு ஹீரோ, ஹீரோயின் எவ்வளவு முக்கியமோ வில்லன்களும் முக்கியமாக பார்க்கப்படுகிறார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் கலக்கிய வில்லன்களுக்கு நடுவில் வில்லன்களுக்கு துணை கதாபாத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் கராத்தே ராஜா.
பள்ளிகளில் கராத்தே வருப்பு எடுத்துக்கொண்டு வந்த இவர் சினிமா மீது ஆர்வத்தில் அதை விட்டுவிட்டு நடிக்க வந்துள்ளார்.
விருமாண்டி, கில்லி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், போக்கிரி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அங்கீகாரம் பெற்றுவிட்டார்.

குடும்பம்
கராத்தே ராஜா 2009ம் ஆண்டு திவ்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளார்கள்.
இந்த நிலையில் கராத்தே ராஜாவின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ அவர் தனது மனைவியுடன் இருக்கும் போட்டோ,
