1 லட்சம் கொடுத்தா தான் ப்ரோமோஷனுக்கு வருவேனா.. சர்ச்சைக்கு விமல் கொடுத்த பதில்
விமல்
நடிகர் விமல் நடிப்பில் தெய்வமச்சன் என்ற படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இதே நாளில் விமலின் மற்றொரு படமான குலசாமி ரிலீஸ் ஆக இருந்தது. அதன்பின் மே 5ம் தேதி குலசாமி பட ரிலீஸ் தள்ளிப்போனது.
சில தினங்களுக்கு முன்பு குலசாமி படத்தின் பிரெஸ் மீட் .நடந்தது. அதில் விமல் கலந்துகொள்ளவில்லை. அதை அமீர் மேடையிலேயே கண்டித்து பேசி இருந்தது பரபரப்பானது.
விமல் 1 லட்சம் கொடுத்தால் தான் ப்ரோமோஷனுக்கு வருவதாக கூறியதாக குற்றச்சாட்டும் வந்தது.
1 லட்சம் கேட்டேனா?
இந்நிலையில் தற்போது விமல் செய்தியாளர்களை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது பயில்வான் ரங்கநாதன் அவரிடம் '1 லட்சம் கேட்டீங்களா?' என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
"தெய்வமச்சான் படக்குழு ஒரு பிரெஸ் மீட் ஏற்பாடு செய்து இருந்தது. அதே நேரத்தில் குலசாமி நிகழ்ச்சி நடந்தது. அதை முடித்துவிட்டு இங்கே வருவதற்குள் குலசாமி பிரஸ் மீட்.முடிந்துவிட்டது இந்த விஷயத்தை அமீரிடம் போனில் கூறி விளக்கம்கொடுத்துவிட்டேன்."
"நான் பணம் எதுவும் கேட்கவில்லை. அப்படி கேட்பதாக இருந்தால் 1 லட்சமா கேட்டிருப்பேன், இன்னும் அதிகம் கேட்டிருப்பேன்" என விமல் கூறி இருக்கிறார்.
ஏமாற்றிய லோகேஷ்.. மாஸ்டர் படத்தில் நடித்ததால் பட்ட வேதனை! நடிகர் சாந்தனு உருக்கம்

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
