காதலர்களை புரட்டிபோட்ட விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம்.. மறு வெளியீட்டில் படைத்த சாதனை
விண்ணைத்தாண்டி வருவாயா
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் காதலர்களை கவரும் வண்ணம் 2009 - ம் ஆண்டு வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.

படத்தின் கதை, சிம்பு-த்ரிஷா கெமிஸ்ட்ரியை தாண்டி ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இப்படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட் தான். சிறந்த விமர்சனத்தை பெற்ற இப்படம், பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பி வசூலை குவித்தது.
படைத்த சாதனை
இந்த வெற்றிப்படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிய நிலையில், சென்னை பிவிஆர் pvr திரையில் மறு வெளியீட்டில் இன்றுடன் இந்த படம் 1000 - வது நாளை கொண்டாடுகிறது.

இந்த pvr திரையில் மட்டும் கடந்த 142 வாரங்களாக இப்படத்தில் ஒரு காட்சியாவது திரையிடப்பட்டு வருகிறதாம்.
இதுவரை இந்தியாவில் எத்தனையோ திரைப்படங்கள் மறு வெளியீட்டை கண்டாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் மட்டுமே அதிக நாட்களை மறு வெளியீட்டில் கடந்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri