'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலில் இருந்து விலகுகிறாரா ஹீரோ வினோத் பாபு?
விஜய் டிவியில் தற்போது ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதில் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடர் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வினோத் பாபு மற்றும் பவித்ரா ஜனனி ஆகியோர் அதில் நடித்து வருகின்றனர்.
தற்போது ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் ஒரு தீவில் சிக்கி இருப்பது போல தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.

வினோத் பாபு விலகிவிட்டாரா?
இந்நிலையில் தென்றல் வந்து என்னைத் தொடும் தொடரில் இருந்து ஹீரோ வினோத் பாபு விலகிவிட்டார் என செய்தி நேற்று பரவியது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.
அது பொய்யான செய்தி என அவரே தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். 'ஒரே ஒரே ஷார்ட் பிலிம் தான் நடிக்க போனேன், அதற்க்குள்ள இவ்ளோவா தெய்வமே.. நான் எங்கயும் போகல.. TVET ல தான் இருக்கேன், இருப்பேன்' என அவர் கூறி இருக்கிறார்.