துணிவு வெற்றியை தொடர்ந்து கமலை வைத்து இயக்கும் அ. வினோத்.. படப்பிடிப்பு எப்போது தெரியுமா
அ. வினோத்
சமீபத்தில் தான் தன்னுடைய இயக்கத்தின் மூலம் துணிவு எனும் மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளார் அ. வினோத்.
இப்படத்தை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவிருக்கும் படம் என்ன என்று கேள்வி எழுந்தது. கமல் ஹாசனின் அடுத்த படத்தை தான் அ. வினோத் இயக்கப்போகிறார் என தகவல் வெளிவந்தது.
ஆனால், இதுவரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படப்பிடிப்பு எப்போது
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முதல் துவங்கும் என தெரியவந்துள்ளது. தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தில் நடித்து முடித்த பின் ஜூன் மாதம் அ. வினோத் படத்தில் இணையப்போவதாக கூறப்படுகிறது.
அ. வினோத் - கமல் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் கணவர் செய்த டார்ச்சர்! கருவை கலைத்த சமந்தா? விவாகரத்துக்கு இதுதான் காரணமா

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
