பிரபல நடிகர் சென்னை விமான நிலையத்தில் கைது.. ரூ.40 கோடி போதைப்பொருள் உடன் சிக்கினார்
நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்குவது தொடர்கதையாகிவிட்டது. ஹாலிவுட் தொடங்கி தமிழ் சினிமா வரை பல நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.
நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா உள்ளிட்ட சில தமிழ் நடிகர்கள் சில மாதங்களுக்கு முன்பு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது ஜாமினில் வெளி வந்திருக்கின்றனர்.
தற்போது சென்னை விமான நிலையத்தில் ஹிந்தி நடிகர் விஷால் பிரம்மா என்பவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் ஸ்டுடன்ட் ஆப் தி இயர் 2 படத்தில் நடித்து பிரபலமானவராம்.
ரூ.40 கோடி போதை பொருள் கடத்தல்
அசாம் மாநிலத்தை சேர்ந்த விஷால் பிரம்மா சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா 347 விமானம் மூலமாக சென்னைக்கு திரும்பி இருக்கிறார். அவரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது அவரிடம் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதனால் அவரை உடனே கைது இருக்கின்றனர்.
இந்த கடத்தலுக்கு பின்னால் நைஜீரிய கேங் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. நடிகர் விஷால் பிரம்மா பண கஷ்டத்தில் இருந்த நிலையில் அவரை நைஜீரிய கேங் அணுகி இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட வைத்திருக்கிறது. கம்போடியா நாட்டுக்கு சுற்றுலா செல்வது போல சென்ற அவர், அங்கிருந்து திரும்பி வரும்போது அவரிடம் கையில் ஒரு ட்ராலி பேக் போதைப்பொருள் உடன் கொடுத்து அனுப்பி இருக்கின்றனர்.
அதனுடன் தான் விஷால் பிரம்மா சென்னையில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.