இயக்குனர் சுந்தர்.சி பிரம்மாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா என்ற படத்தை இயக்க இருந்தார். அந்த படத்தின் போஸ்ட்டர்கள் வெளியிடப்பட்ட நிலையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்தது.
தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்க இருந்த அந்த படத்தில் ஸ்ருதி ஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா உள்ளிட்டவர்கள் நடிக்க இருந்தனர். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் தொடங்கவே இல்லை.
விலகிய விஷால்
இந்நிலையில் தற்போது சங்கமித்ரா படத்தை மீண்டும் கையில் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் சுந்தர். சி. லைகா நிறுவனம் தான் தற்போது தயாரிக்க இருக்கிறது.
ஹீரோவாக விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக முன்பே தகவல் வந்தது. ஆனால் தற்போது விஷால் படத்தில் இருந்து விலகிவிட்டாராம். சம்பள பிரச்சனை காரணாமாக அவர் சங்கமித்ராவில் இருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.
ஹோட்டலில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகை! சில மணி நேரம் முன் இன்ஸ்டாவில் பதிவிட்ட வீடியோ