சாராயத்தால் பறிபோன பல உயிர்கள்!! ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!!

By Dhiviyarajan Jun 20, 2024 12:07 PM GMT
Report

கள்ளக்குறிச்சி 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்து 100 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சில பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

சாராயத்தால் பறிபோன பல உயிர்கள்!! ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!! | Vishal Slams Consumption Of Illicit Liquor

விஷால்!!

இந்நிலையில் நடிகர் விஷால் இது பற்றி எக்ஸ் தலத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும், போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். 

"கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்." என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுபான கடைகளை படிப்படியாக குறைத்திட செயல் திட்டம் வகுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அறிக்கை வாயிலாக தமிழக மக்களின் ஒருவனாக தமிழ்நாடு அரசிற்கு சமர்பிக்கிறேன் என்று விஷால் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.   

சாராயத்தால் பறிபோன பல உயிர்கள்!! ஆவேச அறிக்கை வெளியிட்ட விஷால்!! | Vishal Slams Consumption Of Illicit Liquor

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US