மீண்டும் இணைந்த ராட்சசன் கூட்டணி.. அப்டேட் கொடுத்த விஷ்ணு விஷால்
ராட்சசன் கூட்டணி
தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று ராட்சசன். விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவான இப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதே கூட்டணியில் முதல் முறையாக முண்டாசுப்பட்டி எனும் திரைப்படம் வெளிவந்த நிலையில், அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி ராட்சசன் படத்தில் இணைந்தனர்.
இதன்பின் ராம்குமார் தனுஷை வைத்து படம் இயக்க சென்றிருந்தார். ஆனால், அப்படம் சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. ஆகையால் மீண்டும் விஷ்ணு விஷாலுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
அப்டேட்
சத்யஜோதி தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மூன்றாம்கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து ஹீரோ விஷ்ணு விஷால், இயக்குனருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் "விஷ்ணு விஷால் 21வது படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படப்பிடிப்பில் இயக்குனர் ராம்குமார் உடன், எதிர்பாராததை எதிர்பாருங்கள்" என குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
