அந்த நபரால் தான் எனக்கும் சூரிக்கும் பிரச்சனை வந்தது.. மனம் திறந்த விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷால் - சூரி
விஷ்ணு விஷால் - சூரி காம்போவில் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், ஜீவா,வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மாவீரன் கிட்டு எனப் பல படங்களில் இணைந்து கலங்கினார்கள்.
ஆனால் திடீரென இந்த கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது. அதற்கு காரணம், விஷ்ணு விஷாலின் அப்பா நிலம் வாங்கி தருவதாக சொல்லி 2.7 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக சூரி குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேட்டி
இந்நிலையில் விஷ்ணு விஷால் இந்த பிரச்சனை தொடர்பாக பேசியுள்ளார். அதில் அவர், நானும் சூரியும் பிரச்சனைகளை பேசி சரி செய்துவிட்டோம். இந்த பிரச்சனை பெரியதான சமயத்திலேயே நெருங்கிய வட்டாரங்கள் பேசி சரி செய்துகொள்ளுமாறு கூறினார்கள். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.
நாங்கள் நெருங்கி பேசும் போது தான் பல விஷயங்களுக்கு புரிந்தன. மூன்றாவதாக வந்தவர் அந்த பிரச்சனைக்கு காரணம். எங்களுக்கு இடையே புகுந்து விளையாடியுள்ளார் என்று விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan
