பாக்ஸ் ஆபிஸ்: விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல்
சூர்யா மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் கடந்த மாதம் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ஒவ்வொரு நாள் வசூல் குறித்து நாம் தொடர்ந்து பார்த்துள்ளோம். இந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.
சூர்யாவின் கம்பேக்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா இந்த ஆண்டு கருப்பு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இப்படம் உலகளவில் ரூ. 335 கோடி வரை வசூல் செய்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

விஸ்வநாத் & சன்ஸ்
கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சூர்யாவிடம் இருந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விஸ்வநாத் & சன்ஸ். இயக்குநர் வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய லக்கி பாஸ்கர் திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்பது இல்லை.

வெங்கி அட்லூரி மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாகி கடந்த மாதம் 14-ஆம் தேதி வெளியான இப்படம் உலகமெங்கும் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் லாபத்தை எட்டியது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் லாபத்தை எட்டவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
இறுதி வசூல்
இந்நிலையில், சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் இறுதி வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் ரூ. 220 கோடி மொத்தமாக வசூல் செய்துள்ளது. கருப்பு ரூ. 335 கோடி, விஸ்வநாத் & சன்ஸ் ரூ. 220 கோடி என ஒரே ஆண்டில் ரூ. 555 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளார் சூர்யா.

ஜீது மாதவன் - சூர்யா
கருப்பு மற்றும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜீது மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படமும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது. அப்படமும் வெளிவந்தால் கண்டிப்பாக இந்த ஆண்டிற்குள் நடிகர் சூர்யா மாபெரும் வசூல் சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
