கருப்பு படத்தின் மாபெரும் வெற்றி!! விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த கருப்பு திரைப்படம் உலகளவில் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை ரூ. 280 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விஸ்வநாத் & சன்ஸ்
கருப்பு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருப்பது விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்திற்காக தான். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி எதிர்பார்த்து அவர்கள் காத்திருந்தனர்.

ரிலீஸ்
இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகமெங்கும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதோ அந்த அறிவிப்பு: