மீண்டும் இணைகிறதா விவேகம் பட கூட்டணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்
ஏகே 62
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் ஏகே 62. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தை லைக்கா தயாரிக்கிறது.
அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி 17 அல்லது 18ம் தேதியில் துவங்கும் என தெரியவந்துள்ளது.

ஆனால், இதுவரை இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போவது யார் என்று உறுதிசெய்யப்படவில்லை. திரிஷா தான் கதாநாயகி என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தாலும், அந்த செய்திகள் யாவும் நம்பிக்கையாக கூரப்பவில்லை.
விவேகம் பட கூட்டணி
இந்நிலையில், ஏகே 62 திரைப்படம் அஜித்துக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறதாம்.

அப்படி காஜல் அகர்வால் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்றால், திரிஷா அல்லது நயன்தாரா இருவரில் ஒருவர் தான் ஏகே 62வின் கதாநாயகியாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
திடீரென மாற்றப்பட்ட வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி.. எப்போது தெரியுமா