நடிகர் விவேக்கின் படத்தை காலி செய்த முன்னணி நடிகர்.. யார் தெரியுமா
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் விவேக். இவர் கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். இவருடைய மரணம் திரையுலகினர் மட்டுமின்றி பல கோடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பாலக்காட்டு மாதவன்
இவர் நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பாலக்காட்டு மாதவன். இப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தார்கள். 2015ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி வெளிவந்த இப்படம் முதலில் சோலோ ரிலீசாக தான் இருந்ததாம்.

இதனால் இப்படத்திற்கு தமிழ்நாடு, மலேஷியா என பல இடங்களில் திரையரங்கம் கிடைத்தது. கேரளா ரைட்ஸ், கர்நாடக ரைட்ஸ் என படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், தீடீரென ஜூலை 10ஆம் தேதி வெளிவருவதாக இருந்த முன்னணி நடிகரின் திரைப்படம் ஜூலை 3ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
படத்தை காலி செய்த முன்னணி நடிகர்
உடனடியாக தமிழ்நாட்டில் கிடைத்த 200 திரையரங்கம் 60 திரையரங்கமாக குறைந்தது, மலேஷியாவில் கிடைத்த 60 திரையரங்கம் 16 திரையரங்கமாக மாறியது. கேரளா ரைட்ஸ், கர்நாடக ரைட்ஸ் எல்லாம் திரும்பி வந்துவிட்டது. படம் படுதோல்வியடைந்து நஷ்டமடைந்தது.
அந்த முன்னணி நடிகரின் படம் அன்று வெளிவர வேண்டாம் என்று கெஞ்சினோம். ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த ஒரு உதவி அன்று எனக்கு கிடைக்கவில்லை என்று விவேக் சில வருடங்களுக்கு முன் கூறியுள்ளார்.

இப்படி கூறி விவேக் கடைசி வரை அந்த நடிகர் யார் என்று கூறவில்லை. ஆனால், விவேக்கின் பாலக்காட்டு மாதவன் படம் வெளிவந்த ஜூலை 3ஆம் தேதி, முன்னணி நடிகர் கமலின் பாபநாசம் திரைப்படமும் அதே நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    