விஜய்யுடன் மோதும் அஜித் பட வில்லன்! தளபதி66 பற்றி கசிந்த தகவல்
விஜய்யின் அடுத்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் 66
நடிகர் விஜய் அடுத்து தளபதி 66 படத்தில் நடிக்க தொடங்க இருக்கிறார். இந்த படம் விஜய்யின் முதல் நேரடி தெலுங்கு படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு அதிகம் இருக்கிறது. வம்சி இயக்க உள்ள தளபதி 66 படத்தினை தில் ராஜு தயாரிக்கிறார்.
ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஹீரோயின் பற்றியும் விவரம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என நீண்ட காலமாக கேட்டு வரும் ராஷ்மிகாவுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
வில்லன்
மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் அஜித்தின் விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் நடிப்பது உறுதியானால் விவேக் ஓபராய்க்கு இது இரண்டாவது தமிழ் படம். விவேகம் படத்தில் அவரது நடிப்பு மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு நாள் வருத்தப்படுவாங்க: அட்லீ ஏன் இப்படி ஒரு பதிவை போட்டார்? அந்த நடிகர் பற்றி தானா