புதிய படத்தில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் மகேஸ்வரி- என்ன படம், டைட்டில் என்ன தெரியுமா?
பிக்பாஸ் மகேஸ்வரி
2007ம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்த போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி.
அந்நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் சின்னத்திரை மற்றும் சில வெள்ளித்திரை படங்களில் நடிக்கும் வாய்ப்பு பெற்றார்.
வாய்ப்புகள் கிடைத்த போது திடீரென இனி சினிமாவிற்குள் வர மாட்டேன் என சாணக்யா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று மீண்டும் சினிமா பக்கம் வந்தார். கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு விளையாடி இருந்தார்.
புதிய படம்
பிக்பாஸ் பிறகு அவர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடித்தார். தற்போது புதிய தகவல் ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அதாவது காதல் கண்டிஷன் அப்ளை என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம். இதனை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
குக் வித் சோமாலியில் இருந்து வெளியேறிய பின் ஆண்ட்ரியன் வெளியிட்ட முதல் பதிவு.. என்னவென்று தெரியுமா

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
