அசீமிற்கு கிடைத்த இந்த ஒரு வெற்றி தவறான முன் உதாரணம்..பிக் பாஸ் போட்டியாளர் போட்ட பதிவு
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் கடந்த ஞாயிறு முடிவடைந்து விட்டது. இதில் அசீம், ஷிவின், விக்ரமன் இறுதி சுற்றுக்கு தேர்வு ஆனார்கள்.
இவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியதால் யார் வெற்றியாளர் என்று தீர்மானிக்க முடியவில்லை. ரசிகர்கள் பலரும் விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டில் பட்டத்தை வாங்குவர் என்று எதிர்பார்த்து கொண்டிருந்த போது அசீம் அதிக ஓட்டுகள் வாங்கி டைட்டில் தட்டி சென்றார்.
தவறான முன் உதாரணம்
இதைதொடர்ந்து இவரின் வெற்றியை பலரும் பாராட்டி வந்தாலும் சிலர் இதற்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வி.ஜே மகேஸ்வரி , " அசீம் பிக் பாஸ் பட்டம் வென்றது ஒரு தவறான முன் உதாரணம்" என்று பதிவிட்டிருந்த ஒரு பத்திரிகையின் கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் சிலர் ஆதரவும் தருகின்றனர்.
— Vj_Maheswari (@maheswarichanak) January 23, 2023
துணிவை படத்தை திரையரங்கில் பார்த்த இயக்குனர் வினோத்தின் தந்தை- என்ன கூறுகிறார் பாருங்க

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
