2000 சதுர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க
VJ மணிமேகலை
சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவர் சன் ம்யூசிக்கில் தனது பயணத்தை துவங்கி, பின் விஜய் டிவியில் களமிறங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் மணிமேகலைக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. கோமாளியாக அவர் செய்யும் சேட்டைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் தனது Youtube சேனல் மூலம் கொரோகா காலகட்டத்தில் ரசிகர்களிடையே இன்னும் நெருக்கமானார்.
புதிய பிரம்மாண்ட வீடு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக, விஜய் டிவியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், VJ மணிமேகலை புதிதாக 2000 சதுர அடியில் பிரம்மாண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் Tour வீடியோவை தனது Youtube சேனலில் பதிவு செய்துள்ளார். அந்த லிங்க் இதோ உள்ளது. மேலும் மணிமேகலையின் புதிய வீட்டின் சில புகைப்படங்கள் இதோ பாருங்க..