விஜய் டிவியை விட்டு விலக முடிவெடுத்த பிரியங்கா! அதிர்ச்சி முடிவுக்கு இதுதான் காரணம்
விஜய் டிவியின் டாப் தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மேலும் பாப்புலர் ஆனாலும் மீண்டும் விஜய் டிவிக்கே வந்து தற்போது நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்தமாதம் பிரியங்கா தனது பிறந்தநாளை வீட்டில் கொண்டாடி இருக்கிறார். பிக் பாஸ் நண்பர்கள், விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் சேர்ந்து பிரியங்காவுக்கு பிறந்தநாளில் பல கிப்ட்கள் கொடுத்து இருக்கின்றனர். அதை எல்லாம் பார்த்து பிரியங்கா நெகிழ்ச்சி ஆகி இருக்கிறார்.
கேக் வெட்டி, முகத்தில் எல்லாம் பூசி மகிழ்ச்சியாக பிரியங்கா பிறந்தநாளை கொண்டாடி முடித்திருக்கிறார். அந்த வீடியோவை அவர் ஒரு மாதம் கழித்து தற்போதுதான் வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் காமெடியன் பாலா உடன் பேசும் ஒரு பகுதியும் இடம் பெற்று இருக்கிறது. தனக்கு 30 வயது ஆகிவிட்டது, அதனால் வயதானவர் போன்ற ஃபீல் வருகிறது, அதனால் நான் இதோடு தொலைக்காட்சியை விட்டுவிட்டு ஒரு பிரேக் எடுக்கலாம் என இருக்கிறேன் என தெரிவித்து இருக்கிறார் பிரியங்கா.
அதற்கு பதில் சொன்ன பாலா "மைக்கை பிடித்தவர்கள் எல்லாம் ஆங்கர் ஆகிவிட முடியாது, மைக்கிற்கே பிடித்தவங்க தான் ஆங்கர். நீயே நினைத்தாலும் அது உன்னை விடாது" என கூறி பிரியங்காவின் முடிவை மாற்ற சொல்லி இருக்கிறார்.
குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியால் ஒரு பெண் கர்ப்பமானாரா?- வெங்கடேஷ் பட் சொன்ன விஷயம்

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
