சிவகார்த்திகேயன் ஹீரோயினுடன் நடிக்கும் தொகுப்பாளர் ரக்ஷன்.. உடன் இருந்த முன்னணி நடிகர்
சிவகார்த்திகேயன் ஹீரோயினுடன் வி. ஜே. ரக்ஷன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த இரு திரைப்படங்கள் டாக்டர் மற்றும் டான்.
இந்த இரு திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் இளம் சென்சேஷன் நடிகை பிரியங்கா மோகன்.
இவர் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள ஜெயிலர் திரைப்படத்திலும், விஜய்யுடன் தளபதி 67 படத்தில் கமிட்டாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
உடன் இருந்த முன்னணி நடிகர்
இந்நிலையில், விஜய் டிவியின் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவரான வி. ஜே. ரக்ஷன் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து நடித்துள்ளார்கள்.
அவர்களுடன் இணைந்து துல்கர் சல்மானும் நடித்துள்ளார். இது விளம்பர படமாக இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த புகைப்படங்களை பதிவு செய்துள்ள ரக்ஷன், தனது நண்பர் துல்கர் சல்மானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
