விஜே ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் முதல் படம்.. டைட்டில் இதுதான், வீடியோ இதோ
விஜே ரக்ஷன்
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளர்களில் ஒருவர் விஜே ரக்ஷன். இவர் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையில் வலம் வந்துகொண்டிருந்த ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால்பதித்தார்.
ஹீரோவாக முதல் படம்
இந்நிலையில் தற்போது ஹீரோவாகவும் களமிறங்கிவிட்டார். ஆம், யோகத்திறன் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் மறக்குமா நஞ்சம் எனும் திரைப்படத்தில் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் கலக்கப்போவது யார் தீனா நடிக்கிறார். இப்படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த வீடியோ..
நடிகர் விஜயகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri
