தொகுப்பாளர் ரக்ஷன் நடிக்கும் புதிய படம்- போட்டோவுடன் வந்த அப்டேட்
தொகுப்பாளர் ரக்ஷன்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனவர் ரக்ஷன்.
கடந்த 2019ம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிகராக அறிமுகமானார். சில மாதங்களுக்கு முன் ரக்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து அறிவிப்பு வந்தது.
புதிய அப்டேட்
இரா.கோ.யோகேந்திரன் இயக்க சச்சின் வாரியர் இசையமைக்க தயாராகும் இப்படத்தை பிலியா எணடர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாம். அதனை KPY புகழ் தீனா படப்பிடிப்பு தள புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
நடிகை ராதிகா சரத்குமாரின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- எவ்வளவு பெரிய வீடு

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
