வார் 2 தோல்வி.. ஜூனியர் என்டிஆரின் அடுத்த படம் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி
கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி ரஜினியின் கூலி படத்துடன் பாக்ஸ் ஆபிசில் மோதிய படம் வார் 2. ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் அந்த படத்தில் மெயின் ரோல்களில் நடித்து இருந்தனர்.
400 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 12 நாட்களில் வெறும் 340 கோடி மட்டுமே மொத்தமாக வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் வந்த வசூல் 265 கோடி மற்றும் வெளிநாடுகளில் 75 கோடி இந்த படம் வசூலித்து உள்ளது.
Jr என்டிஆர் அடுத்த படம் டிராப்?
வார் 2 படத்தால் நஷ்டம் தான் தயாரிப்பு நிறுவனம் யாஷ் ராஜ் பிலிம்ஸ்க்கு ஏற்பட்டு இருக்கிறது. அதே நிறுவனம் அடுத்து ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ஒரு புது படத்தை தயாரிக்க இருந்தது.
வார் 2 தோல்வி அடைந்ததால் தற்போது அந்த புது படம் கைவிடபட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.