வார் 2 படத்தின் இரண்டு நாட்கள் வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
யாஷ் ராஜ் ஸ்பை யூனிவெர்ஸ்
பாலிவுட் திரையுலகில் யாஷ் ராஜ் ஸ்பை யூனிவெர்ஸ் உருவாகியுள்ளது. வார், பதான் மற்றும் டைகர் ஆகிய திரைப்படங்கள் இந்த யூனிவெர்சில் உள்ளன.
ஏற்கனவே பதான் திரைப்படத்தில் டைகர் சல்மான் கான் என்ட்ரி கொடுத்தது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதே போல் டைகர் 3 திரைப்படத்திலும் பதனாக ஷாருக்கான் கேமியோ செய்திருந்தார்.
வார் 2 பாக்ஸ் ஆபிஸ்
இந்த ஸ்பை யூனிவெர்சின் அடுத்த படைப்பாக வார் 2 திரைப்படம் கடந்த 14ம் தேதி வெளிவந்தது. அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் வெற்றிகரமாக இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 175 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துள்ளது.

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
