பாரதி கண்ணம்மா சீரியலை முடிப்பீங்களா இல்லையா? வில்லி நடிகை கொடுத்த பதில்
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் முடியப்போகிறது என கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே பேச்சு இருந்து வருகிறது. ஆனால் தற்போது வரை கதை நீண்டுகொண்டே தான் செல்கிறது.
பாரதிக்கு டிஎன்ஏ டெஸ்ட் முடிவு தெரிந்த பிறகு அவர் கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்டாலும் அவர் அதை ஏற்றுக்கொள்வதில்லை, மகள்களை கூட்டிக்கொண்டு ஒரு கிராமத்துக்கு சென்று வசித்து வருகிறார். அவரை தேடி பாரதி அங்கே போனாலும், அவர் இறுதியில் டைவர்ஸ் கொடுப்பதாக கூறி அதிர்ச்சி கொடுக்கிறார்.
நீதிமன்றத்தில் பாரதியும் டைவர்ஸுக்கு ஒப்புக்கொள்கிறார். அதனால் அவர்களுக்கு விவாகரத்து கொடுக்கப்படுகிறது. தற்போது கண்ணம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் திருமணம் செய்ய முயற்சித்து கொண்டிருக்கிறார் பாரதி.
சீரியலை முடிப்பீங்களா இல்லையா?
இந்நிலையில் இந்த தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா அசாத்திடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
'பாரதி கண்ணம்மா சீரியலை முடிப்பீங்களா இல்லையா' என கேட்டதற்கு, 'அடிச்சு கேட்டாலும் சொல்ல கூடாதுனு சொல்லிருக்காங்க' என பதில் அளித்து இருக்கிறார் அவர்.