இரண்டாவது ஹனிமூனுக்கு நயன்தாரா எவ்வளவு செலவு செய்தார்? கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் பல வருட காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடந்த திருமண விழாவில் ஷாருக் கான், ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
ஹனிமூன்
திருமணம் முடிந்தபிறகு நயன் - விக்கி இருவரும் தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்றனர். நயன்தாரா ஷாருக்கின் ஜவான் படத்தில் நடிக்க இருந்ததால் இருவரும் வேகமாக இந்தியா திரும்பி விட்டனர்.
நயன்தாரா ஜவான் ஷூட்டிங் சென்ற நிலையில், விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விழா ஏற்பாடுகளை செய்தார். அதற்கு பிறகு இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருக்கின்றனர்.
செலவு செய்தது யார்?
இந்த இரண்டாவது ஹனிமூனில் எடுக்கும் போட்டோக்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த இரண்டாம் ஹனிமூன் செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் விக்கி - நயன் இருவரும் ஒரு பைசா செலவில்லாமல் ஹனிமூன் சென்றிருக்கிறார்கள்.
ஏற்கனவே அவர்கள் திருமண செலவையும் நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
த்ரிஷா துளிகூட மேக்கப் இல்லாமல் இருக்கும் போட்டோ வைரல்!