சுந்தர் சி-க்கு பதில் ரஜினி படத்தை இயக்க போவது இவரா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்
நடிகர் ரஜினியின் அடுத்து படமான "தலைவர் 173" படத்தை கமல்ஹாசன் தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தை சுந்தர் சி இயக்க போவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பின் சில தினங்களில் சுந்தர் சி படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்தார்.
ரஜினி கதையில் பல மாற்றங்கள் செய்ய சொன்ன நிலையில் தான் சுந்தர்.சி வெளியேறி இருக்கலாம் என கூறப்படுகிறது.

அடுத்து இவரா..
இந்நிலையில் ரஜினியை அடுத்து இயக்கப்போவது யார் தான் என பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், தற்போது ஒரு புது தகவல் உலா வருகிறது.
நடிகர் தனுஷ் தான் ரஜினியை இயக்க பேச்சுவார்த்தையில் இருக்கிறார் என கிசுகிசு பரவி வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு தற்போது இப்படி ஒரு தகவல் பரவி வருவதால், அது வதந்தியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
இருப்பினும் தலைவர்173 படத்தின் இயக்குனர் யார் என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும்.
