ஜீ தமிழின் சமையல் எக்ஸ்பிரஸ் ஷோவில் இருந்து சீதா திடீரென விலகியது ஏன்?... என்ன பிரச்சனை
சமையல் நிகழ்ச்சி
மனிதனுக்கு பசி என்று ஒன்று இருக்கும் வரை சமையல் இருக்கும். இதனால் எத்தனை சமையல் நிகழ்ச்சிகள் வந்தாலும் மக்களுக்கு சலிக்கவே சலிக்காது.
எனவே போட்டிபோட்டு எல்லா தொலைக்காட்சியும் விதவிதமான சமையல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.
விஜய் டிவியில் குக் வித் கோமாளி, சன் டிவியில் டாப் குக்கூ டூப் குக்கூ, ஜீ தமிழ் எடுத்துக் கொண்டால் அண்மையில் சமையல் எக்ஸ்பிரஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கினார்கள்.
விலகிய காரணம்
இந்த சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக களமிறங்கினார் சீதா. ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்த வேகத்தில் அதில் இருந்து விலகியிருக்கிறார்.
தற்போது அவருக்கு பதில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் சுஜிதா தொகுப்பாளினியாக களமிறங்கியுள்ளார்.
ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு முதலில் வருவதற்கே முதலில் சீதா யோசித்துள்ளார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டதால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஆரம்பமே என்ன பிரச்சனையோ, சீதா காட்சிகள் இன்னொரு விருந்தினராக கலந்துகொண்ட புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்னசி தொடர்புடைய படப்பிடிப்பு தனித்தனியாக எடுத்துள்ளார்கள்.
அதோடு கிருஷ்ணா மெகன்சி தரப்பில் இருந்த கண்டிஷங்கள் என இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனையில் இருந்துள்ளது. இடையில் படப்பிடிப்பில் சில பிரச்சனைகள் வந்துள்ள நிலையில் சுத்தமாக ஷோவில் இருந்து சீதா வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
