பிரபல தொகுப்பாளினி பெப்ஸி உமா சினிமாவை விட்டு விலக இதுதான் காரணமா?
தொகுப்பாளினி உமா
பெப்ஸி உமா தனது பள்ளிப் படிப்பு காலத்திலேயே தொகுப்பாளினியாக அறிமுகமாகிவிட்டார். முதன்முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வாங்க பழகலாம் நிகழ்ச்சி மூலம் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
100 எபிசோடுகளை தாண்டி வெற்றியடைய பின்பே தான் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு வந்திருக்கிறது. அப்போது ஒரு கண்டிஷன் போட்டாராம், அதாவது தனது உடை, மேக்கப் மற்றும் தான் பேசக்கூடிய ஸ்டைலில் நீங்கள் தலையிட கூடாது என்று கூறியிருக்கிறார்.
அவர்கள் இதற்கு ஒப்புக்கொள்ள பின்பு பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தினார்.
சினிமாவில் ரஜினியுடன் முத்து படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு எல்லாம் வந்துள்ளது, ஆனால் முடியாது என கூறியுள்ளார். காரணம் அவருக்கு நடிப்பது சுத்தமாக பிடிக்கவில்லையாம்.
பாரதிராஜா படங்கள் ஏன் பாலிவுட்டில் ஷாருக்கான் ஜோடியாக கூட நடிக்க வாய்ப்பு வந்ததாம். அனைத்தையும் வேண்டாம் என கூறியிருக்கிறார்.
சினிமாவில் விலகிய காரணம்
பெப்ஸி உமா சினிமாவில் தலைக்காட்டாமல் இருப்பதற்கு நிறைய காரணங்கள் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் தனது கணவரின் தொழிலை கவனித்துக் கொள்வதற்காகவே சினிமாவில் இருந்து விலகினார் என்கின்றனர்.
நடிகை ஷாலினியும் பெற்றோர்களான, அஜித்தின் மாமனார், மாமியாரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்க