பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணமே இதுதானா?- வெளிவந்த தகவல்
பாக்கியலட்சுமி சீரியல்
பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி.
தமிழில் சுசித்ரா மற்றும் கோபி முக்கிய வேடத்தில் நடிக்க தொடர் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் பாக்கியா சமையலை தாண்டி ஆங்கிலம் கற்பது, கல்லூரி செல்வது என பிஸியாக இருக்கிறார்.
இடையில் கேன்டீனில் பிரச்சனை ஏற்பட ராதிகா கிடைத்த கேப்பில் பாக்கியாவை திட்டிதீர்த்துவிடுகிறார். இதனால் பாக்கியா கதறி கதறி அழுகிறார், இதோடு கடந்த வார எபிசோடு முடிவடைகிறது.
மாற்றப்பட்டாரா பிரபலம்
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரமான அமிர்தா மாற்றப்பட்டுவிட்டதாக சில தகவல்கள் இன்ஸ்டாவில் வலம் வருகின்றன.
தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா விலகியதால் அவருக்கு பதில் காற்றுக்கென்ன வேலி சீரியல் பிரபலம் அக்ஷிதா அசோக் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ரித்திகா நடிக்கும் அமிர்தா கதாபாத்திரம் அடுத்து வில்லியாக மாற இருப்பதால் அவர் வெளியேறிவிட்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.
விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி