இதற்காக தான் நயன்தாரா வீட்டுக்கு சென்றாரா ஷாருக்கான்?
ஷாருக்
நடிகர் ஷாருக் கான் பல வருடங்களுக்கு பிறகு பதான் மூலமாக மிகப்பெரிய ஹிட் கொடுத்து இருக்கிறார். விரைவில் அந்த படம் 1000 கோடி வசூல் என்ற பிரம்மாண்ட சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்து ஷாருக் கான் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். அந்த படமும் வசூல் சாதனை படைக்க வேண்டும் என ஷாருக் தீவிரமாக உழைத்து வருகிறார்.
நயன்தாரா வீட்டுக்கு சென்றது ஏன்?
சமீபத்தில் சென்னை வந்த ஷாருக் கான் நடிகை நயன்தாரா வீட்டுக்கு சென்று இருந்தார். அவரை காண ரசிகர்களும் அதிகம் பேர் அங்கு கூடிவிட்டனர். ஷாருக் எதற்காக வந்தார் என்கிற காரணம் வெளியாகி இருக்கிறது.
நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க தான் அவர் வந்தாராம். அவரை நயன்தாரா வெளியில் வந்து வழியனுப்பி வைத்த வீடியோவும் சில தினங்களுக்கு முன்பு வைரலானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கவினை காதலிக்கும் விஜய் பட நடிகை?