புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகும் என முதலில் சொல்லப்பட்ட வாரிசு ட்ரைலர் ஏன் இன்னும் வெளிவரவில்லை?
வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து இருக்கும் படம் வாரிசு. மாஸ் படங்களாக நடித்து வந்த விஜய் ஏன் திடீரென அப்படி குடும்ப செண்டிமெண்ட் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் என ஆரம்பத்தில் இருந்தே பேச்சு இருக்கிறது.
தற்போது படம் முடிந்து பொங்கல் ரிலீஸுக்கு தயாராகி கொண்டிருக்கிறது. இன்னும் படம் ரிலீஸ் ஆக பத்து நாட்களை விட குறைவாகவே இருக்கிறது. இருப்பினும் தற்போது வரை வாரிசு ட்ரைலர் வெளியாகவில்லை.

தாமதத்திற்கு என்ன காரணம்?
புத்தாண்டு ஸ்பெஷலாக துணிவு படத்தின் ட்ரைலர் வெளியானது. வங்கி கொள்ளை மையப்படுத்திய கதை என்பதால் ட்ரைலரில் அதிகம் ஆக்ஷ்ன் காட்சிகளும், மாஸ் வசனங்களும் இடம்பெற்று இருந்தது.
வாரிசு படத்தின் ட்ரைலர் அதற்கு ஈடு கொடுக்கும் வகையிலும், பதிலடி கொடுக்கும் வகையில் வசனங்கள் இருக்க வேண்டும் என படக்குழு பணியாற்றி வருகிறதாம். அதனால் தான் ட்ரைலர் வெளியாக தாமதம் ஆகிறது என தகவல் வெளியாகி இருக்கிறது.

இலங்கை பிரபலம் நடிகை மதுமிளாவை நியாபகம் இருக்கா?- அவரின் குழந்தையை பார்த்துள்ளீர்களா?