மிகப்பெரிய படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி! காரணம் இதுதான்
நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் கைவசம் டஜன் கணக்கில் படங்கள் வைத்து இருப்பவர். சோலோ ஹீரோவாக நடிக்கும் படங்கள் ஒருபக்கம், வில்லனாக நடிக்கும் படங்கள் மற்றும் கெஸ்ட் ரோலில் நடிக்கும் படங்கள் என லிஸ்ட் நீளும்.
பாலிவுட் வாய்ப்பு
விஜய் சேதுபதிக்கு ஆமீர் கானின் லால் சிங் சத்தா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனுக்கு பிறகு அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்த படம் மட்டுமின்றி தெலுங்கில் ஹிட் ஆன புஷ்பா படத்தில் இருந்தும் அவர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
லால் சிங் சத்தா படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தேர்வானார். அந்த கதாபாத்திரமும் தெலுங்கு பேசும் நபர் என படத்தில் மாற்றப்பட்டது.

விஜய் சேதுபதி விலகியது ஏன்
இந்நிலையில் தற்போது நாக சைதன்யா அளித்து இருக்கும் பேட்டியில் விஜய் சேதுபதி அந்த படத்தில் இருந்து விலக என்ன காரணம் என கூறி இருக்கிறார்.
"கால் ஷீட் பிரச்சனை காரணாமாக மட்டுமே விஜய் சேதுபதி விலகினார். அவர் படக்குழுவை சந்தித்து தனது பிரச்சனையை கூறி விலகிக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அதற்க்கு பிறகு தான் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது" என நாக சைதன்யா கூறி இருக்கிறார்.

நடிகர் வடிவேலுவின் மகளை பார்த்துள்ளீர்களா.. அவர் திருமணத்தில் எடுத்த புகைப்படம் 
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    