லியோ படத்தின் சக்ஸஸ் மீட்டில் ரஜினிகாந்த், கமல் ஹாசன்.. கலைக்கட்டுமா விழா
வெற்றி விழா
லியோ படத்தின் வெற்றி விழா நாளை மாலை நடைபெறுகிறது. காவல் துறை அனுமதியின் விதிகளின் கீழ் மாலை 4 மணிக்கு துவங்கும் இந்த விழா இரவு 8 மணிக்குள் நிறைவடையும் என கூறப்படுகிறது.
மேலும் 5000 பேர்களுக்கு மட்டுமே அரங்கத்தில் அனுமதி என்றும் பாஸ் வைத்திருப்பவர்கள் கையோடு ஆதார் ஆட்டை நகலையும் எடுத்து வரவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த விழாவில் லியோ படத்தின் படக்குழுவை தவிர்த்து வேறு யார் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் இருவரும் கலந்துகொள்ள போகிறார்கள் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி - கமல் கலந்துகொள்வார்களா
ஆனால், இருவருமே இந்த வெற்றி விழாவில் கலந்துகொள்ள துளி கூட வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே போய்க்கொண்டு இருக்கும் ரசிகர்கள் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க விஜய் ரசிகர்கள் ரஜினியை சீண்டும் வகையில் கமெண்ட் செய்துவிட்டால் அது பெரிய சர்ச்சை ஆகிவிடும் என்பதாற்காக ரஜினிகாந்த் வெற்றி விழாவிற்கு வர வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.
மேலும் கமல் ஹாசனும் இந்த விழாவில் கலந்துகொள்ள வில்லை எங்கின்றனர். இதனால் லியோ படக்குழு மட்டுமே இந்த வெற்றி விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.