TRPயில் பாக்கியலட்சுமியை ஓரம்கட்ட வேகமாக வரும் மற்றொரு விஜய் டிவி சீரியல்
டிஆர்பி
டிஆர்பி ரேட்டிங் பெறுவதில் தற்போது சேனல்களுக்கு நடுவில் பெரிய போட்டியே நடைபெற்று வருகிறது. சன் டிவி நீண்டகாலமாக முன்னணியில் இருந்தாலும் அவ்வப்போது விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்கள் முன்னணிக்கு வருகின்றன.
சில வருடங்களுக்கு முன்பு ஜீ தமிழில் செம்பருத்தி சீரியல் முதலிடத்தில் இருந்தது, அதன் பின் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தொடரும் முன்னணியில் இருந்தது.
ஆனால் தற்போது சன் டிவியின் ஆதிக்கம் அதிகரித்து தற்போது டாப் 5 டிஆர்பி லிஸ்டில் சன் டிவி தொடர்கள் மட்டுமே இடம்பிடித்து வருகிறது. அதற்கு ஈடுகொடுக்க விஜய் டிவியும் போட்டிபோட்டுகொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பு வருகிறது.
பாக்கியலட்சுமியை முந்தும் தொடர்?
தற்போது பாக்கியலட்சுமி தான் விஜய் டிவியின் முன்னணி தொடராக இருந்து வருகிறது. பாக்யா மற்றும் கோபி இடையே நடக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து பரபரப்பை கூட்டி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியின் மற்றொரு சீரியலான சிறகடிக்க ஆசை தற்போது நல்ல ரேட்டிங் பெற தொடங்கி இருக்கிறது.
வாரத்திற்கு வாரம் ரேட்டிங் அதிகரித்து வரும் நிலையில் தற்போது ஓட்டுமொத்த ரேட்டிங்கில் 7ம் இடம் பிடித்து இருக்கிறது சிறகடிக்க ஆசை. அதனால் வெகு விரைவில் பாக்கியலட்சுமியை சிறகடிக்க ஆசை முந்து என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.